அயோத்தி வழக்கில் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் மூவருமே தமிழர்கள்!

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தரை நியமித்து சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழுவும்
அயோத்தி வழக்கில் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் மூவருமே தமிழர்கள்!

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தரை நியமித்து சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

மத்தியஸ்த குழுவில் நியமிக்கப்பட்டிருக்கும் மூவருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி நிலப் பிரச்னையில் தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு என 3 பேர் இடம்பெற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சமரசப் பேச்சுவார்த்தை மிக ரகசியமாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்தியஸ்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு வாரத்தில் தொடங்கி 8 வாரத்தில் நடந்து முடிய வேண்டும். அயோத்தி சமரச பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை ஊடகங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஃபக்கிர் மொகம்மது இப்ராஹிம் கலிஃபுல்லா

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஃபக்கிர் மொகம்மது இப்ராஹிம் கலிஃபுல்லா 1951ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி தமிழகத்தின் சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்தவர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய கலிஃபுல்லா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து 2016ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

ஆன்மிகக் குருவாகக் கருதப்படும் வாழும் கலை  அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தமிழகத்தின் பாபநாசம் பகுதியில் 1956ம் ஆண்டு மே 13ம் தேதி பிறந்தவர். 

ஸ்ரீராம் பஞ்சு

மூத்த வழக்குரைஞரும், நடுநிலையாளராகவும் திகழ்பவர் ஸ்ரீராம் பஞ்சு. தி மெடியேஷன் சாம்பர்ஸ் நிறுவனரும் ஆவார். வணிகம், நிறுவனங்கள் என பல்வேறு வகையான வழக்குகளில் இவர் மத்தியஸ்தராக செயல்பட்டு சுமூகத் தீர்வுக்கு வழிகண்டுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com