இடைத்தேர்தல் வரலாறுகள் ஆளுங்கட்சிக்கே சாதகம்: வரலாறு திரும்புமா?

மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத் தேர்தல் முடிவுதான் மாநில அரசின் தலையெழுத்தையே தீர்மானிக்க உள்ளது.
இடைத்தேர்தல் வரலாறுகள் ஆளுங்கட்சிக்கே சாதகம்: வரலாறு திரும்புமா?

மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத் தேர்தல் முடிவுதான் மாநில அரசின் தலையெழுத்தையே தீர்மானிக்க உள்ளது.

சாதாரண  இடைத்தேர்தல் தானே என்று நினைத்துவிட முடியாத அளவுக்கு 18 பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவது மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியின் பெரும்பான்மை சரிந்திருக்கும் நிலையில் நடைபெறுவதால்  இடைத்தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

பொதுவாக கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், தமிழகத்தில் ஆட்சியில்  இருக்கும் கட்சியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கின்றன.

இது 1957 - 62ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது 7 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் அக்கட்சியே 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2 தொகுதிகளை சுயேச்சைகள் வென்றனர்.

1962 - 67 
ஆளுங்கட்சி : காங்கிரஸ்
இடைத் தேர்தல் : 4 தொகுதிகளுக்கு 
வெற்றி : 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி
ஒன்றில் எதிர்க்கட்சியான  திமுக வெற்றி

1967-71
ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 7 தொகுதிகளுக்கு 
வெற்றி : 4 தொகுதிகளில் ஆளுங்கட்சியான திமுக  வெற்றி
மூன்றில் எதிர்க்கட்சிகள் வெற்றி

1971-77
ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 2 தொகுதிகளுக்கு 
ஆளுங்கட்சிக்கு ஒரு தொகுதியும் கிட்டவில்லை.
வெற்றி : 2 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் வெற்றி

1977-1980
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 3 தொகுதிகளுக்கு 
வெற்றி : 3 தொகுதிகளிலும் ஆளுங்கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி

1980-84
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 6 தொகுதிகளுக்கு 
வெற்றி : 4 தொகுதிகளில் அதிமுக மற்றும் காங்கிரஸ் வெற்றி
இரண்டில் எதிர்க்கட்சியான  திமுக வெற்றி

1984-88
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 4 தொகுதிகளுக்கு 
வெற்றி : 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி
கூட்டணியான காங்கிரஸ் ஒன்றில் வெற்றி

1989 - 91 
ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 2 தொகுதிகளுக்கு 
வெற்றி : 2 தொகுதிகளில் எதிர்க்கட்சியான அதிமுக வெற்றி

1991 - 96
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 5 தொகுதிகளுக்கு 
வெற்றி : 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி
ஒன்றில் எதிர்க்கட்சியான  திமுக வெற்றி

1996 - 2001
ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 8 தொகுதிகளுக்கு 
வெற்றி : ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 6 தொகுதிகளில் வெற்றி
தலா ஒன்றில் எதிர்க்கட்சியான  அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

2001 - 2006
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 8 தொகுதிகளுக்கு 
வெற்றி : 7 தொகுதிகளில் அதிமுக வெற்றி
ஒன்றில் எதிர்க்கட்சியான  திமுக வெற்றி

2006 - 2011
ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 11 தொகுதிகளுக்கு 
வெற்றி : அனைத்துத் தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கைப்பற்றின.

2011 - 2016 
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 6 தொகுதிகளுக்கு 
வெற்றி : அனைத்து 6 தொகுதிகளிலும் ஆளும் அதிமுகவே வெற்றி பெற்றது.

2016 - 2019 
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 2 தொகுதிகளுக்கு 
வெற்றி : 1 தொகுதியில் ஆளும் அதிமுக வெற்றி
ஒன்றில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

இந்த புள்ளி விவரத்தைப் பார்க்கும் போது பொதுவாக ஆளுங்கட்சியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.

அப்படியே 1971- 77ம் ஆண்டுகளிலும், 1989 - 1991 ஆண்டுகளிலும், இடைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், அந்த சமயத்திலும் இந்த வெற்றிக் கனியைப் பறித்திருப்பது அதிமுகவாகவே இருப்பதையும் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com