மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளராக தெகலான் பாகவி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இணைந்துள்ளது. இந்தக் கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக முன் நிறுத்துவது என்பது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தேசிய துணைத் தலைவரான தெகலான் பாகவியை வேட்பாளராக அறிவிப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறனும், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளரும் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.