
தூத்துக்குடியில் திமுக வேட்பாளரும் கருணாநிதியின் மகளுமான கனிமொழியை எதிர்த்து, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி மிகவும் முக்கியமான தொகுதியாக உருவெடுத்துள்ளது. திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசையும் வேட்பாளர்களாக நிற்கின்றனர்.
மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவராக உள்ள கனிமொழிக்கு இது முதல் தேர்தல்.
தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை போட்டியிடப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. அப்போது, தமிழிசை போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, யார் போட்டியிட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று கனிமொழி கூறினார்.
2006-இல் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியிலும், 2009-இல் வடசென்னை மக்களவைத் தொகுதியிலும், 2011-இல் வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...