
புது தில்லி: இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பிரதான வழக்கில் குற்றம்சாட்டுப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பிரதான வழக்கில் குற்றம்சாட்டுப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் விசாரணைக்காக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நீதிபதி அருண் பரத்வாஜ் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தவிட்ட நீதிபதி, சாட்சிகள் மீதான விசாரணையை சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து, சுகேஷ் சந்திரசேகர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...