
தூத்துக்குடியில் 25 ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கவிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தூத்துக்குடி மக்களைத் தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போடியிடுகிறார். இதற்கான அறிவிப்பை கட்சி மேலிடம் நேற்று வெளியிட்டது.
இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
விருப்பப்பட்டபடி நான் தூத்துக்குடியில் போட்டியிடுகிறேன். தூத்துக்குடியில் நான் 25ஆம் தேதி எனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவேன். அதே நாளில் என்னுடைய வேட்பு மனுவையும் தாக்கல் செய்வேன்.
தூத்துக்குடி மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். இது பாசிச பாஜக ஆட்சி அல்ல, பாசமான பாஜக. தூத்துக்குடி மக்களுக்கும் அது தெரியும். தேர்தல் முடிவின் போது அது தெரிய வரும் என்றார். மேலும் விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ கனிமொழிக்கு வாக்கு கேட்டது குறித்து பேசிய தமிழிசை, அவர் வாய் தவறி கனிமொழி பெயரை கூறிவிட்டார் எனத் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...