தேனி மக்களவைத் தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி மக்களவைத் தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி மக்களவைத் தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்துடன் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. 

அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். 

அதில், தேனி மக்களவைத் தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் இதே தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஓ.பி.எஸ் மகனை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளதால் தேனி தொகுதி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுபினர். அதற்கு பதிலளித்த அவர், தேனி மக்களவைத் தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை. மக்கள் பதில் சொல்வார்கள். தேனி மட்டுமின்றி 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com