
பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் முருகன் ஆகியோரை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் முருகன் பங்கேற்கவில்லை. இது தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் முருகனை மாற்றம் செய்து கட்சித் தலைமை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் முருகனுக்கு பதிலாக மயில்வேல் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...