
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சென்னை புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை புழல் சிறையில் உள்ள பேரறிவாளன் திடீரென லேசான நெஞ்சுவலி இருப்பதாக கூறியதை அடுத்து ஸ்டான்லி மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் சிறுநீரக தொற்று தொடர்பாகவும் பேரறிவாளனுக்கு பரிசோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...