ஏப். 18-இல் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
ஏப். 18-இல் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
Updated on
1 min read


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:- தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கு பொதுத் தேர்தலும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதையடுத்து, 1957-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்ட செலாவணி முறிச் சட்டம் 1881-ன் கீழ் 25-வது பிரிவின்படி பொது விடுமுறை விடப்படுகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறையானது ஊதியத்துடன் கூடிய விடுமுறையாகும். இந்த விடுமுறை , தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com