
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தின் விமான பயணிகளையும், உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சோதனையில், ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவர் ஆடைக்குள் மறைத்து 1.38 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...