
அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் முதல் கட்ட சுற்றுப் பயண அட்டவணையை அக்கட்சித்தலைமை புதன்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து, அமமுக வெளியிட்ட அறிவிப்பு:
அதன்படி, புதன்கிழமை மாலை ராயபுரத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய டிடிவி. தினகரன், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், மாதவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
இதையடுத்து, வியாழக்கிழமை சென்னையில் விருகம்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், அம்பத்தூர் ஆகிய இடங்களிலும், தொடர்ந்து, வேலூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, கரூர், திண்டுக்கல், பெரம்பலூர், திருச்சி, தேனி ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை டிடிவி தினகரன் பிரசாரம் செய்ய உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...