
பிரதமர் மோடியின் தமிழக பிரசார பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் மதுரையிலும், பிப்ரவரி மாதம் திருப்பூர், கன்னியாகுமரியிலும் கடந்த 6-ஆம் தேதி சென்னையிலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் செய்ய தமிழகம் வர உள்ளார். முன்னதாக அவர், வருகிற 8-ஆம் தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பிரதமர் மோடியின் தமிழக பிரசார பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அவர் ஏப்.8 ஆம் தேதிக்கு பதிலாக ஏப்.12, 13 தேதிகளில் தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி ஏப்.12 கோவையிலும், ஏப்.13 தேனியிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...