
சென்னை: ஃபானி புயல் பாதிப்புக்கு உள்ளான ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
ஃபானி புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
ஒடிஷா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது
ஒடிஷா மக்களுடனான ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் காட்டுவதற்காக இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...