
ஆளுநர் அதிகாரம் குறித்து மேல்முறையீடு செய்ய கிரண்பேடிக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
பாஜக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. சரக்கு சேவை வரியை முறையாகச் செயல்படுத்தாததால் விலைவாசி உயர்ந்துள்ளது. வடமாநில மக்கள் மத்திய ஆட்சி மாற்றத்துக்காகக் காத்திருக்கின்றனர். மோடி ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றுவோம். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வோம்.
ஆளுநர் அதிகாரம் குறித்து கிரண் பேடி மேல்முறையீடு செய்ய ஒத்துழைக்க மாட்டோம். இதற்காக, புதுச்சேரி அமைச்சரவை நிதி ஒதுக்கீடு செய்யாது. ஆளுநராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் கிரண் பேடி தனது சொந்த செலவில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...