

திருப்பரபங்குன்றம்: அமமுகவுக்கு போட்டி திமுகதான். அதிமுக எங்களுக்கு பொருட்டே அல்ல என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து தங்க தமிழ்ச்செல்வன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமமுக வழிப்போக்கர் கட்சியல்ல. ஆா்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது.
அதிமுக ஊழல் மிகுந்த கட்சியாக உள்ளது. தற்போது நடைபெற உள்ள தோ்தலிலும் தோல்வியடையும். திருப்பரங்குன்றத்தில் மகத்தான வெற்றிபெறப்போவது அமமுக தான். அதேநேரத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றி விடுவோம் என பேராசைப்படுகிறது. திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது. தோ்தல் பயத்தின் வெளிப்பாடு தான் அதிமுக மூன்று எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தோ்தல் களத்தில் திமுக தான் எங்களது ஒரே போட்டி. அதிமுக எங்களுக்கு பொருட்டே அல்ல என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.