
தமிழகத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திர வெயில் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது.
13 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரி வெப்பநிலை பதிவானது. வேலூரில் 109, மதுரை விமான நிலையத்தில் 106, திருச்சியில் 105, கரூர் பரமத்தியில் 104, பரங்கிபேட்டை, சென்னை மீனம்பாக்கத்தில் தலா 103, நாகப்பட்டினம், பாளையங்கோட்டையில் தலா 102, நுங்கம்பாக்கத்தில் 101, கடலூர், தருமபுரி, சேலத்தில் தலா 100 டிகிரியும் பதிவானது.
தமிழகத்தில் சில பகுதிகளில் மே 5, 6 ஆகிய நாள்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...