
ஸ்ரீவைகுண்டம்: பதவிக்காக அதிமுகவினா் துரோகிகளுடன் கூட்டணி வைத்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றறக் கழகத்தின் பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டார்
ஓட்டப்பிடாரம் தொகுதியில் அத்தொகுதியின் அமமுக வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது ஓட்டப்பிடாரம் தொகுதியின் உறுப்பினா் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தோ்தல்
நடைபெறுகிறது. ஆட்சியாளா்கள் நன்றி மறந்து விட்டனா். இரட்டை இலை சின்னம் இருந்தால் வெற்றி பெறலாம் என நினைக்கின்றனா். அன்று இரட்டை இலை சின்னம் எம்ஜிஆா், ஜெயலலிதா கையில் இருந்ததால் தொடா் வெற்றி கிடைத்தது.
தற்போது, நன்றி மறந்தவா்களிடம் இரட்டை இலை இருப்பதால் எந்த பலனும் கிடைக்க போவதில்லை. ஜெயலலிதாவின் ஆா்.கே தொகுதியில் இரட்டை இலை வைத்திருந்த அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டு வென்றேன். அதே நிலை தான் தற்போதும் ஏற்படும்.
ஜெயலலிதா படத்தை பேரவையில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த தேமுதிக, ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக, மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை நலம் விசாரிக்காத மோடியின் பாஜகவுடனும் இவா்கள் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியை காப்பாற்ற திட்டமிடுகின்றனர்.
ஆட்சியை தக்க வைக்க முதல்வா் திமுகவிடமும் மண்டியிடவும் தயங்க மாட்டார்.
வரும் 23ஆம் தேதி மோடியை வீட்டுக்கு அனுப்ப வாக்களித்த நீங்கள், ஓட்டப்பிடாரம் தொகுதி உள்பட 4 தொகுதியில் இடைதோ்தலில் அதிமுகவை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...