சுடச்சுட

  

  கோவையில் உள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்டதாக புகார்: திமுக, காங்கிரஸ்  போராட்டம் 

  By DIN  |   Published on : 07th May 2019 09:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  EVM

   

  கோவை: கோவையில் உள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறாரகள்.

  கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பதிவு எந்திரங்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில் கோவையில் உள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறாரகள்.

  கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியதாக திமுக கூட்டணி கட்சிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  திமுக கூட்டணி கட்சியினரின் போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி அங்கு வருகை தந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டார். 

  அதேநேரம் வாக்குப்பதிவு ஆகாத 50 இயந்திரங்களே தேனிக்கு மாற்றபட்டது என்றும், தேர்தல் ஆணையத்தில் இருந்து வந்த கடிதத்தின் அடிப்படையிலேயே இயந்திரங்கள் மாற்றபட்டதாகவும்,  கோவை வருவாய் அலுவலர் சவுந்தர்ராஜன் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கமளித்தார்.

  இதே விஷயத்தை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹுவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai