பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது: கேஎஸ் அழகிரி

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது: கேஎஸ் அழகிரி

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் முடிவு ஆளுநர் முன்பு இருப்பதால் எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பார் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி திருப்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சரவை தீர்மானத்தைதான் முடிவாக எடுக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆளுநர் எப்படி வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம். சட்டத்திற்குட்பட்டு எது நடந்தாலும் எங்களுக்கு சம்மதமே. நீதி இவ்வாறுதான் வழங்கப்பட வேண்டும் என சிறு குழுக்கள் முடிவெடுக்கக் கூடாது. 

ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com