
கமல்ஹாசன் கூறிய கருத்துக்காக அவருடைய நாக்கை அறுக்க வேண்டும் எனக் கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்காக அவருடைய நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறார். இந்த வன்முறை பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதோடு, கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உண்மையைப் பேசிய கமல்ஹாசனைப் பாராட்டுகிறோம். ஆனால் தேர்தல் பரப்புரையின் போது மதத்தைக் குறிப்பிட்டு பேசக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிக்கு முரணாக அவர் பேசியிருப்பது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார்.