
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் சந்திரபாபு நாயுடுவை துரைமுருகன் சந்தித்தார்.
அவரது மனைவி, மகன் கதிர் ஆனந்தும் உடன் சென்றனர்.
இந்தச் சந்திப்பு அரசியல் நிமித்தமானது அல்ல. மரியாதை ரீதியானது என்று துரைமுருகன் கூறினார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.