
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு- தடியடியை குறும்படம் தயாரித்து வெளியிட்ட சமூக ஆர்வலர் முகிலன் கதி என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. எனவே, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி, ஒவ்வொருவரின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.