நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கை:  மே 17 முதல் விண்ணப்பிக்கலாம்

நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு மே 17-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவைச் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு மே 17-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவைச் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துறைகள் , உறுப்புக் கல்லூரிகளில் 2019-20 கல்வியாண்டில் நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மூன்று ஆண்டு டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்ப விவரங்களை மே 17 ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம்.  விண்ணப்பப் பதிவுக்கு ஜூன் 16 கடைசி நாளாகும். இவ்வாறு ஆன்-லைனில் பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனுடன் ரூ. 300-க்கான வரைவோலையை இணைத்து, செயலர், நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ., பி.டெக். சேர்க்கை - 2019-20, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி - 630003 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.accet.co.in, www.accetedu.in, www.accetlea.com ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com