
கமல் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் இல்லாமல் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்திருந்தார். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் புதன்கிழமை கமல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.