
ஆற்காடு பகுதியில் உள்ள கால்வாயில் விசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ஆற்காடு ஆரணி செல்லும் சாலையில் தனியாா் திருமண மண்டம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாயில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற ஆற்காடு நகர போலீஸாா் குழந்தையின் சடலத்தை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.