
சென்னை: தமிழகத்தில் ஞாயிறன்று நடைபெற்று வரும் நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான, காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம். அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஞாயிறன்று காலை துவங்கி வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இந்த தொகுதிகளில் காலை 11 மணி அளவில் பதிவாகியுள்ள வாக்குப்பதிவு விபரங்களை, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு செய்தியாளர்களிடம் பகிந்து கொண்டார். அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம்: 30.02%
அரவக்குறிச்சி: 34.89%
சூலூர்: 31.55%
ஓட்டப்பிடாரம் (தனி): 30.28%
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.