காலமானார்: கவிஞர் நெல்லை ஆ.கணபதி

 சென்னை அண்ணாநகர், திருமங்கலம் பகுதியில் வசித்து வந்த கவிஞர் நெல்லை ஆ.கணபதி (85)  உடல் நலக் குறைவால் கடந்த திங்கள்கிழமை (மே 27) காலமானார்.
காலமானார்: கவிஞர் நெல்லை ஆ.கணபதி
Published on
Updated on
1 min read


 சென்னை அண்ணாநகர், திருமங்கலம் பகுதியில் வசித்து வந்த கவிஞர் நெல்லை ஆ.கணபதி (85)  உடல் நலக் குறைவால் கடந்த திங்கள்கிழமை (மே 27) காலமானார்.
அவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும்,  புதுச்சேரி தூர்தர்ஷனில் நிகழ்ச்சி இயக்குநராகப் பணியாற்றும் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி உள்பட 2 மகள்கள், மகன்  உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு வில்லிவாக்கம் மயானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கவிஞர் நெல்லை ஆ.கணபதியின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கரந்தாநேரி ஆகும். இவர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். கல்வி சேவைக்கான நல்லாசிரியர் விருது, ஏவிஎம். அறக்கட்டளை வழங்கிய சிறந்த எழுத்தாளருக்கான தங்கப்பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.  20-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களையும், ஆராய்ச்சி நூல்களையும், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இலக்கிய நூல்களையும் படைத்துள்ளார்.  தொடர்புக்கு 87787 31135.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com