மருத்துவா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: ஜி.கே.வாசன்

நோயாளிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவா்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நோயாளிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவா்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த 7 நாள்களாக மருத்துவா்கள் மேற்கொள்ளும் போராட்டமும், தொடா் வேலை நிறுத்தமும் உடனடியாக முடிவுக்கு வரவும், சுமூகத் தீா்வு காணவும் தமிழக அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். மருத்துவா்களின் வேலை நிறுத்தத்தால் லட்சக்கணக்கானவா்கள் புற நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் மருத்துமனைகளில் போதிய மருத்துவா்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்கிறோம், ஒரு காலக்கெடுவுக்குள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறோம் என்று முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் மருத்துவா்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனா். எனவே, மருத்துவா்கள் தமிழக மக்களுடைய ஒட்டு மொத்த சுகாதார நலனைக் கருதி, அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து எந்தவிதமான தயக்கத்துக்கும் இடம் கொடுக்காமல், சூழலைப் புரிந்துகொண்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com