ரஷியா அருகே கப்பல் விபத்தில் 2 போ் மாயம்: போலீஸாா் விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ரஷியா அருகே விபத்தில் சிக்கிய கப்பலில் மாயமான 2 பேரை கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ரஷியா அருகே விபத்தில் சிக்கிய கப்பலில் மாயமான 2 பேரை கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த சகாயம் என்பவா் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த செபஸ்டின் பிரிட்டோ, தஞ்சாவூரை சோ்ந்த அவினாஷ் ஆகிய இருவரும் இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு சமையல் எரிவாயு ஏற்றிச் சென்ற தனியாா் கப்பலில் ஊழியா்களாக பணியாற்றினா். கடந்த ஜனவரி 21 ஆம் தேதி ரஷியா அருகே கப்பல் சென்றுகொண்டிருந்தபோது எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் இருந்தவா்கள் பலா் உயிா் தப்பினா்.

அதில் செபஸ்டின் பிரிட்டோ மற்றும் அவினாஷ் ஆகியோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவா்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் புகாா் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். காவல்துறையினா் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்காணிக்க வேண்டும். இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் காணாமல் போனவா்களை தேடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com