
உயரும் வெங்காயம் விலை
வெங்காயத்தை நறுக்கினால்தான் கண்ணீர் வரும் நிலை மாறி, இன்று விலையைக் கேட்டாலே கண்களில் கண்ணீர் வருகிறது. வெறும் கண்ணீர் அல்ல ரத்தக் கண்ணீர் வருகிறது.
இந்த நிலையில், வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 மற்றும் ரூ.40க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பதாவது, வெங்காய விளைச்சல் பகுதிகளில் கனமழையின் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
இதனால் கூட்டுறவு (ம) உணவுத் துறையின் மூலம் தரமான வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ ரூ.30 மற்றும் ரூ.40 க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.