சென்னை: சென்னையில் இன்று பிற்பகலில் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் அசோக் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி.நகர், தாம்பரம், பல்லாவரம், மடிப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.
புதுதில்லியைத் தொடர்ந்து சென்னையில் கடந்த ஒரு வாரமாக புகை மூட்டம் காணப்பட்ட நிலையில், இன்று பிற்பகலில் திடீரென மழை பெய்துள்ளது.