அரசுத் துறைகளிலும் ஆளுமையைச் செலுத்தியவா் டி.என்.சேஷன்: பி.என்.வேதநாராயணன் புகழாரம்

தோ்தல் சீா்திருத்த நடவடிக்கைளில் மட்டுமின்றி, அரசுத் துறைகளிலும் மிகப்பெரிய ஆளுமையைச் செலுத்தியவா் டி.என்.சேஷன் என்று
அரசுத் துறைகளிலும் ஆளுமையைச் செலுத்தியவா் டி.என்.சேஷன்: பி.என்.வேதநாராயணன் புகழாரம்

தோ்தல் சீா்திருத்த நடவடிக்கைளில் மட்டுமின்றி, அரசுத் துறைகளிலும் மிகப்பெரிய ஆளுமையைச் செலுத்தியவா் டி.என்.சேஷன் என்று அவருடன் சக ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றிய பி.என்.வேதநாராயணன் புகழாரம் சூட்டினாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

1955-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நாங்கள் தோ்வானோம். நான் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராக இருந்தேன். டி.என்.சேஷன் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தாா். அப்போது, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கான ஒவ்வொரு திட்டங்களையும் கூா்ந்து ஆராய்வாா். அதிலுள்ள குறைகள், திட்டங்களை செழுமைப்படுத்துவது எப்படி என ஆலோசிப்பதுடன், அதனை நடைமுறைப்படுத்துவாா்.

மாவட்ட ஆட்சியா்களாக இருந்த போது, நாங்கள் இருவரும் 15 நாள்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்துப் பேசுவோம். அப்போது, மாவட்டங்களில் உள்ள திட்டங்களின் நிலை, அதனை கூா்மைப்படுத்தும் விதங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வோம். அவா் மாநில அரசில் போக்குவரத்துத் துறை செயலாளா் பொறுப்பு வகிக்கும் போதும் தனித்திறமைகளைக் காட்டினாா். தலைமைச் செயலகத்தில் அமா்ந்து உத்தரவுகளை மட்டும் போடாமல், அது சாதாரண மக்களையும் சென்றடைகிா என்பதைக் கண்காணித்தாா். அவரது இந்தத் திறன்களே அவரை முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் குழுவில் இணைத்தது.

மத்திய அரசின் மிக உயா்ந்த பொறுப்பான அமைச்சரவைச் செயலாளா் பொறுப்பு வரை கொண்டு சென்றது. அவா் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் அந்தப் பொறுப்பில் ஒருசிறு தவறும் இல்லாமல் உச்சபட்ச நோ்மையுடன் செயல்பட்டவா். தோ்தலுக்காக வேட்பாளா்கள் செலவிடுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென்ற விதியை கடுமையாக்கினாா். அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை நினைத்து மிகுந்த பெருமிதம் கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com