
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 183 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 183 பேரும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 148 பேரும் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் அர்ஜூன்குமார் கூறியது: நடப்பாண்டில், ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 128 பேர் டெங்கு பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
புதன்கிழமை நிலவரப்படி மதுரை மாவட்டத்தில் 4 பேர் மட்டும் டெங்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
காய்ச்சல் பாதிக்கப்பட்ட 148 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறையினர் முழு கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...