சேலத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி தெரிவித்தார்.


சேலம்: சேலம் மாவட்டத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் 6 வயது பள்ளி சிறுமியை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.  அந்தச் சிறுமிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி சனிக்கிழமை நேரில் சென்று சிறுமியைச் சந்தித்து நலம் விசாரித்தார்.  சிறுமியின் பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேலம் ஓமலூரில் 6 வயது பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போக்úஸா சட்டத்தின் பிரிவில் வழக்கை ஆண் காவலர் விசாரிக்கக் கூடாது,  சீருடையில் வரக் கூடாது,  பெற்றோரை அருகில் வைத்துத்தான் விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால்,  காவலர்கள் சீருடையில் வந்துள்ளனர்.  பெற்றோரை வெளியேற்றி ஆண் காவலர் விசாரித்துள்ளார்.  போக்úஸா சட்டத்தின்படி போலீஸார் அணுகுமுறை குறித்த புகாரை அளிக்க உள்ளோம்.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.  இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல் துறை இணைந்து பெண்கள் அமைப்பினரை அழைத்துக் கூட்டம் நடத்தி, இதுபோன்ற வன்முறைகளைத் தடுத்து நிறுத்திட  வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com