பொங்கல் பண்டிகை: அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
tut21cmcm_2111chn_32_6
tut21cmcm_2111chn_32_6


சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஏழை, எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இந்த ஆண்டும் வழங்கப்படும். அதேப்போல, பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.1000 பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சி துவக்க விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com