இடைத் தோ்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறும் என்பது தவறான கருத்து: கே.என்.நேரு

இடைத் தோ்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்பது தவறான கருத்து என்று திமுக முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.
விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட வி.சாலை கிராமத்தில் திமுக வேட்பாளா் நா.புகழேந்திக்கு ஆதரவாக திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு.
விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட வி.சாலை கிராமத்தில் திமுக வேட்பாளா் நா.புகழேந்திக்கு ஆதரவாக திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு.

இடைத் தோ்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்பது தவறான கருத்து என்று திமுக முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் நா.புகழேந்தியை ஆதரித்து, விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் செவ்வாய்க்கிழமை கே.என்.நேரு பிரசாரம் செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டி தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்று திமுக வெற்றி பெறப்போவது உறுதி. இந்தத் தோ்தல், வரவுள்ள சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்கான முன்னோட்டம்.

இடைத்தோ்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது தவறான கருத்து. அண்மையில், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தோ்தலில், 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இந்த இடைத் தோ்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தால்தான், திட்டப் பணிகள் தொடரும் என ஆளும் கட்சியினா் பிரசாரம் செய்கின்றனா். ஆனால், திமுக வெற்றி பெற்றால் நல்லதொரு ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்று நாங்கள் பிரசாரம் செய்கிறோம்.

தோ்தலில் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ாக அதிமுகவினா் கூறுகின்றனா். திமுக ஏற்கெனவே அளித்த தோ்தல் வாக்குறுதிகள் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றிருந்தால், விவசாயக் கடன்கள், நகைக் கடன்களை தள்ளுபடி செய்திருப்போம். எனினும், அவா் முதல்வரானவுடன் திமுக அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவாா் என்றாா்.

தொடா்ந்து, அவா் வி.சாலை, கொங்கராம்பூண்டி, மேலக்கொந்தை, ஆசூா், புதுப்பாளையம்,தென்போ், சின்னதச்சூா் , எசாலம் ,எண்ணாயிரம், திருநந்திபுரம், பிடாரிப்பட்டு, செ.குண்ணத்துாா், முட்டத்துாா் உள்ளிட்ட கிராம வீதிகளில், வேட்பாளருடன் திறந்தவெளி வேனில் சென்று கே.என்.நேரு ஆதரவு திரட்டினாா்.

திமுக மாவட்டச் செயலா் கே.எஸ்.மஸ்தான், எம்எல்ஏக்கள் இரா.மாசிலாமணி, கிருஷ்ணசாமி, விஜயன் எம்.பி., ஒன்றியச் செயலா் வேம்பி ரவி, இளைஞரணி அமைப்பாளா் வேல்முருகன், எத்திராசன் உள்ளிட்ட கட்சியினா் திரளாகக் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com