தமிழர்களின் அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன: மோடி தமிழில் டிவீட்

இந்தியா - சீனா இடையே அலுவல்சாரா உச்சி மாநாடு சிறப்பாக நிறைவு பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்


சென்னை: இந்தியா - சீனா இடையே அலுவல்சாரா உச்சி மாநாடு சிறப்பாக நிறைவு பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறார்.

அவருக்கு தமிழக அரசு சார்பில் மிகச் சிறப்பான வழியனுப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என பலரும், பிரதமர் மோடிக்கு வாழ்த்துச் சொல்லி வழியனுப்பி வத்தனர்.

முன்னதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் கூறியிருப்பதாவது, மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி.

தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.

நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும் என்று தமிழில் டிவீட் செய்துள்ளார்.

அழகிய மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய- சீன முறை சாரா உச்சி மாநாட்டிற்கு உறுதுணை புரிந்து உபசரிப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாச்சார அமைப்புகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆற்றல் மிக்க தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் மோடி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com