மாமல்லபுரத்தை மணக்க வைத்த சமையல்: சீன அதிபருக்கான விருந்தில் இட்லி, தோசை இல்லையா, அப்போ?

இந்தியப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பான நடைபெற்று முடிந்துள்ளது. இரு தலைவர்களும் சென்னை விமான நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரத்தை மணக்க வைத்த சமையல்: சீன அதிபருக்கான விருந்தில் இட்லி, தோசை இல்லையா, அப்போ?


இந்தியப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இரு தலைவர்களும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனித் தனி விமானம் மூலம் புறப்பட்டனர்.

சீன அதிபரை வரவேற்ற போது எந்த விதமான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோ, அதேப்போல, வழியனுப்பும் நிகழ்வும், துளியும் உற்சாகம் குறையாமல் அது போன்ற கலை நிகழ்ச்சிகளோடு நிறைவு பெற்றது.

சீன அதிபருக்கு மாமல்லபுரம் கடற்கரை பகுதியிலேயே இரவு விருந்தினை பிரதமர் நரேந்திர மோடி அளித்தார். இந்த விருந்துக்கான சமையல் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கியது. அப்போது அந்தக் கடற்கரை பகுதி முழுவதும் சமையல் மணம் பரவியதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தெரிவித்தனர்.

இரவு விருந்தில் முற்றிலும் தென்னிந்திய, அதிலும் தமிழகத்தின் உணவு வகைகளே அதிகம் இருந்தன. குறிப்பாக தக்காளி ரசம், கையால் அரைத்த மசாலாவில் தயாரிக்கப்பட்ட சாம்பார், கடலை குருமா, கவினி அரிசி அல்வா என தமிழகம் சார்ந்த 200 வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டன.

அப்படி என்னென்ன உணவுகள் இடம்பெற்றன என்பது குறித்த பட்டியல் இதோ..

 இடம்பெற்ற உணவுகளின் பட்டியல் இதோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com