கோவை, குமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கோவை, குமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

வடகிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 தினங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. 

வடகிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 தினங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளிலும் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. மழையின் காரணமாக பிரதான அருவியான திற்பரப்பு அருவி மற்றும் உலக்கை அருவி, குற்றியாறு இரட்டை அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று கோவையில் கடந்த ஒரு வாரமாகவே அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் கோவை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

மேலும் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னையிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com