மதுரையில் மத்திய அரசை விமர்சித்து அவதூறாக முகநூலில் கருத்துகளை பதிவிட்ட இளைஞர் மீது 2 பிரிவுகளின் கீழ், போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை செல்லூர் கைலாசபுரத்தைச் சேர்ந்த ரகுபதி மகன் குமரன். இவர், புரட்சிகர மாணவர் முன்னணி இயக்கத்தின் மதுரை மாவட்டச் செயலராக உள்ளார். இவர், மத்திய அரசை அவதூறாக விமர்சித்ததுடன், காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முகநூலில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
இது குறித்து போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து, செல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் தியாகப்பிரியன் அளித்த புகாரின்பேரில், குமரன் மீது இந்திய அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்பட்டதாக 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.