6 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வில் 17 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் குரூப் 4 எழுத்துத் தேர்வை 17 லட்சம் பேர் எழுதுகின்றனர். 
6 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வில் 17 லட்சம் பேர் பங்கேற்பு
Updated on
1 min read

குரூப் 4 தொகுதியில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள் வருகின்றன. இவற்றில், மொத்தம் 6 ஆயிரத்து 491 காலியிடங்கள் உள்ளன. 

அதில், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 397, இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 2 ஆயிரத்து 688, தட்டச்சர் பணியிடங்கள் 1,901, சுருக்கெழுத்து தட்டச்சர் 784 என மொத்தம் 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் குரூப் 4 எழுத்துத் தேர்வை 17 லட்சம் பேர் எழுதுகின்றனர். 301 தாலுகா மையங்களிலும் தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வு காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. 

எழுத்துத் தேர்வை எழுதுவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கூடத்துக்குள் பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும். வண்ண எழுதுகோல், பென்சில், புத்தகங்கள், குறிப்புகள், வரைபட கருவிகள், பாடப்புத்தகங்கள் ஆகியவற்றைக் கொண்டு வரக்கூடாது. செல்லிடப்பேசி மற்றும் இதர மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com