
சேலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ குட்டப்பட்டி ஆர்.நாராயணன் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
சேலத்தை அடுத்த குட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ஆர்.நாராயணன் (97).
இவர் பேரூராட்சி தலைவராகவும், ஒன்பது முறை குட்டப்பட்டி பஞ்சாயத்து தலைவராகவும், 1977 முதல் 1980 வரை எம்எல்ஏஆகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாகக் காரணமாக இருந்தவர்.
வங்கியின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். காமராஜர் அறக்கட்டளை நிறுவி அதன் தலைவராக பல்வேறு முயற்சிகளை செய்துள்ளார். அவரது உடல் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளது.