பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

காந்தி ஜயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் புதன்கிழமையிலிருந்து  வரும் அக்.1ஆம் தேதி வரை பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


காந்தி ஜயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் புதன்கிழமையிலிருந்து  வரும் அக்.1ஆம் தேதி வரை பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய  சுற்றறிக்கை: மத்திய அரசின் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு செப். 11 முதல் அக்டோபர் 1 வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை  நடத்த வேண்டும்.
அதன்படி, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்தல், பயன்பாட்டில் இருந்து நீக்குதல், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பொருள்களை சேகரித்து மறுசுழற்சிக்கு உள்படுத்துதல் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
நமது மாநிலத்தில் பள்ளிகளில் ஏற்கெனவே ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி வளாகம் மற்றும் அதற்கு அருகே உள்ள இடங்களில் இருந்து, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்க வேண்டும்.
அக்டோபர் 3 முதல் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரை பிளாஸ்டிக் பொருள்களை உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் சேகரித்து, மறுசுழற்சிக்கு உள்படுத்த வேண்டும். 
பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள், உள்ளூர் தன்னார்வலர்களுடன் இணைந்து சேகரித்தல், அவற்றை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இதுதொடர்பான அறிவுறுத்தல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com