இந்தி மொழி மட்டும் என்றால் தமிழகம், வட கிழக்கு மாநிலங்கள் இருக்காது: வைகோ 

இந்தி மொழி மட்டும் என்றால் தமிழகம், வட கிழக்கு மாநிலங்கள் இருக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி மட்டும் என்றால் தமிழகம், வட கிழக்கு மாநிலங்கள் இருக்காது: வைகோ 

இந்தி மொழி மட்டும் என்றால் தமிழகம், வட கிழக்கு மாநிலங்கள் இருக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. நீதிமன்றங்கள் சவுக்கடி கொடுத்திருக்கின்றன. எனது கட் அவுட்டினை எங்கும் வைக்க நான் என்றுமே அனுமதித்தது இல்லை. இன்று தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புக்குத் தேர்வில் நன்மையும் இருக்கிறது. ஆனால், திடீரென ஒரு முடிவு என்பதுதான் யோசிக்க வேண்டியது. தேர்வு அவசியம். இல்லையெனில் நாம் தயாராக முடியாது. 

அந்த விழிப்புணர்வு வரட்டும். கன்னியாகுமரி கிராமத்தில் சிறிய பள்ளியில் பயின்று இன்று உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன். அவர் தோல்வி அடையவே இல்லை. அவரது முயற்சியில் மகத்தான வெற்றி பெற்றுவிட்டார். இன்னும் ஒரு வருடத்திற்கு ஆர்பிட்டர் அங்கு நிலவை சுற்றிக் கொண்டே இருக்கும். அவர்களுக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பெரும் தொகை முதலீடாக வரும் என அறிவித்திருக்கிறார்கள். 

ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. இது எப்படி நடைமுறைப்படுத்தப்படும் எனும் கேள்வி எழுந்து வருகிறது. இந்தி மொழி மட்டும் என்றால் தமிழகம், வட கிழக்கு மாநிலங்கள் இருக்காது. கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியை எதிர்கின்றன. வட கிழக்கு மாநிலங்களில் ஆங்கிலம் ஆட்சி மொழி ஆகும். அரிசுவடிகூட அறியாத ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக உள்ளார் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com