தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த பணிகளுக்கு அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்படாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த பணியிடங்கள் அனைத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் தான் நிரப்பப்படுகின்றன. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டும் தமிழ்நாட்டு இளைஞர்கள், தொடர்வண்டித்துறை போட்டித்தேர்வுகளில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டாததால் தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மிகக்குறைந்த அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசுப் பணிகளில் பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாலும், தமிழகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் பழங்குடியினர் உள்ளனர் என்பதாலும் தான் வெளிமாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விளக்கம் ஏற்கத்தக்கதக்கதல்ல.