பணிநேரத்தில் மனதை லேசாக வைத்துக் கொள்வது எப்படி? திருட மறந்த திருடனின் சிசிடிவி பதிவு

விழுப்புரத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற நபர் அங்குள்ள ஊஞ்சலில் ஆடிய சுவராஸ்யமான சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
பணிநேரத்தில் மனதை லேசாக வைத்துக் கொள்வது எப்படி? திருட மறந்த திருடனின் சிசிடிவி பதிவு


விழுப்புரத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற நபர் அங்குள்ள ஊஞ்சலில் ஆடிய சுவராஸ்யமான சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ (53). இவர் தென்பேர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது வீட்டின் தரைத் தளத்தை வாடகைக்கு கொடுத்துள்ளனர். முதல் மாடியில் இளங்கோ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாள்களாக, வீட்டின் கீழ் நிறுத்தப்படும் அவரது இரு சக்கர வாகனத்திலிருந்து பெட்ரோல் திருடப்பட்டு வந்தது. மேலும், அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோலும், வீடுகளில் செருப்புகளும் அடிக்கடி திருடப்பட்டன.

இதையடுத்து, இளங்கோ தனது வீட்டைச் சுற்றிலும் 6 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார். ஆனால், அவற்றின் பதிவுகளை அவர் தொடர்ந்து கண்காணிக்கவில்லை.

இந்த நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரின் இரு சக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை திறந்து விட்டு காலி செய்தது தெரிய வந்தது. இதையறிந்த இளங்கோ கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், பக்கத்து வீட்டு மாடி வழியாக இளங்கோ வீட்டு மாடிக்கு திங்கள்கிழமை இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் வருவதும், அவர் அங்கிருந்த பொருள்களை ஒவ்வொன்றாக பார்ப்பதும், அங்கிருந்த ஊஞ்சலில் சிறிது நேரம் உட்கார்ந்து ஆடி மகிழ்ந்துவிட்டு, வந்த வழியே சென்று விடுவதும் பதிவாகியிருந்தது.

பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து கேமரா பதிவுக் காட்சிகளைக் காட்டிய இளங்கோ, யாரென்று அடையாளம் தெரிகிறதா? என்று விசாரித்தார். யாருக்கும் அந்த இளைஞர் குறித்த விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விழுப்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணி நேரத்தில் மனதை லேசாக வைத்துக் கொள்ள முடியாமல் நாமெல்லாம் கஷ்டப்படும் போது, திருட வந்த இடத்தில் ஏதோ விண்டோ ஷாப்பிங் வந்தது போல ஆர அமற ஊஞ்சல் விளையாடிச் சென்ற திருடன் வியப்பின் உச்சம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com