இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் நாளை அறிவிப்பு

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை ஞாயிற்றுக்கிழமை முதல் (செப்.22) அளிக்கலாம் என்று அந்தக் கட்சித்
இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் நாளை அறிவிப்பு

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை ஞாயிற்றுக்கிழமை முதல் (செப்.22) அளிக்கலாம் என்று அந்தக் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. 

இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. 

இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் கட்சி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், வரும் திங்கள்கிழமை (செப். 23) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தி, விருப்ப மனுக்களை வரும் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் கட்சி அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

நேர்காணல் அறிவிப்பு: இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக் கோரி விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை (செப்.23) பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும். 
இந்த நேர்காணலில் விருப்ப மனு அளித்துள்ள கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தங்களது அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நேர்காணல் நிறைவடைந்த பிறகு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்  என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

2016 தேர்தலில் அதிமுக...

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சடப் பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக இரண்டாம் இடத்தைப் பெற்றது. இரண்டு தொகுதிகளிலும் இரண்டு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கான வாக்கு வித்தியாசம் அதிகளவு இருந்தது. அதேசமயம், மக்கள் நலக் கூட்டணியில் இருந்த தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அந்த இரண்டு தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்றுள்ளன. அதன் விவரம்:

விக்கிரவாண்டி:

கே.ராதாமணி (திமுக)    63,757
ஆர்.வேலு (அதிமுக)    56,845
சி.அன்புமணி (பாமக)    41,428
ஆர்.ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட்)     9,981

நான்குனேரி:

ஹெச்.வசந்த்குமார் (காங்கிரஸ்):     74,932
எம்.விஜயகுமார் (அதிமுக):     57,617
ஜெயபாலன் (தேமுதிக)    9,446
மணிகண்டன் (பாஜக)    6,609
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com