Enable Javscript for better performance
தூத்துக்குடியில் காற்று, சூரிய மின் உற்பத்தியுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: மத்திய அமைச்சர் ந- Dinamani

சுடச்சுட

  

  தூத்துக்குடியில் காற்று, சூரிய மின் உற்பத்தியுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

  By DIN  |   Published on : 29th September 2019 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  degree1

  விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. உடன், விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், விப்ரோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் விஸ்வாஸ் தீப், விஐடி துணைத்தலைவர்கள்  சங்கர் விச

  தூத்துக்குடியில் காற்று, சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துடன், கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

  வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் 34-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியது: 

  புதிய இந்தியா குறித்து பிரதமர் பேசி வருகிறார். அத்தகைய இந்தியாவின் தூண்களாக மாணவர்கள் உள்ளனர். திறமையான இளைஞர்களுக்கு பொறுப்புணர்வு அதிகளவில் உள்ளது. அரசு, தனியார் துறை என எங்கு பணி செய்தாலும், சொந்தமாக தொழில் தொடங்கினாலும் அவற்றில் தங்களது அனுபவம், அறிவுத்திறனை பயன்படுத்தி உயர்வை அடைய வேண்டும். 

  சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு ஆண்டுதோறும் ரூ.80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் ,ரூ.17 லட்சம் கோடி மதிப்பிலான சாலைப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தொழில்முனைவோருக்கு வணிகத்தில் தலைமைப் பண்பு அவசியம். திறமையான இளம் பொறியாளர்கள் வேலை தேடாமல் வேலை அளிப்பவராக மாற வேண்டும்.  நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 29 சவீதமும், ஏற்றுமதி 49 சதவீதமாகவும் உள்ளது. சிறு, குறு தொழில் துறை சார்பில் 11 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி பங்களிப்பை 50 சதவீதமாகவும், ஏற்றுமதியை 49 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

  இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை அதிகரித்து, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதே அரசின் கொள்கையாக இருக்கிறது. அதற்காக மாணவர்கள் வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகளில் அதிகளவில் ஈடுபட வேண்டும்.

  தமிழகத்துக்காக ஒரு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தில் காற்று, சூரிய ஒளி மின்சக்தி மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. 
  இதன்மூலம், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.30க்கு அளிக்க முடியும். இந்த திட்டத்தை தூத்துக்குடி, பாரதீப், கண்ட்லா துறைமுகங்களில் செயல்படுத்துவதுடன், கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும். இந்தியாவில் 7500 கி.மீ தூரத்துக்கு கடற்கரை உள்ளன. இதன்மூலம், ரூ. 3-க்கு குறைந்த விலையில் மின்சாரம் தயாரித்து வழங்க முடிவதுடன், சுத்திகரிக்கப்படும் தண்ணீரை விவசாயத்துக்கும் பயன்படுத்தலாம் என்றார் அவர்.

  விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குநர் சந்தியா பென்ட்டரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  விஐடிக்கு மத்திய  அரசின் சீர்மிகு கல்வி நிறுவனங்களுக்கான 
  அங்கீகாரம்: ஜி.விசுவநாதன்

  விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது: விஐடியின் கிராமப்புற மாணவர்கள்  திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்திலுள்ள கிராமப் பள்ளிகள்  மேம்படுத்தப்பட்டுள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வில் கிராமப்புற பள்ளிகளில் படித்து மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு விஐடியின் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற காரணங்களுக்காக மத்திய அரசு விஐடியை  சீர்மிகு நிறுவனம் என அங்கீகரித்துள்ளது. தொடர்ந்து, விஐடியை சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இணையாக உயர்த்துவதே எனது கனவாகும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai