காவிரி பிரச்னையை தீர்த்து வைக்க முடியவில்லை: அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம்!

தமிழகத்துக்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி நதி நீர் பகிர்வு பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்துள
நிதின் கட்கரி
நிதின் கட்கரி

தமிழகத்துக்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி நதி நீர் பகிர்வு பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்துள்ளார். 

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், 'நீர் மேலாண்மைக்காக நாடு முழுவதும் பல திட்டங்களைத் துவக்கி, அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், காவிரி பிரச்சினையை தீர்த்து வைக்க என்னால் முடியவில்லை. காவிரி பிரச்னையை தீர்த்து வைத்து விடலாம் என்று ஒரு நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துவிடுமோ என்று தோன்றுகிறது. இந்தப் பிரச்னைக்கு தமிழகம் ஒருநாள் தீர்வு காணும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  

சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்காக சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான பகுதிகளில்  கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கப்படும். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தேவையான பல ஆலைகள் அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.

மேலும், சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை தனியார் பங்களிப்புடன் திட்டங்களைத் தொடங்க தொடங்க அரசு முடிவு செய்யும். விஐடி போன்ற நிறுவனங்கள் கூட இதில் ஒரு பங்கை வகிக்கக்கூடும். 

நாட்டில் விவசாயம், பழங்குடியினர் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு  உள்ளிட்டவற்றில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com